எல்லோருக்கும் தருவதற்கு பிரியங்களை தவிர வேறொன்றுமில்லை விருப்பு வெறுப்பின் மேடு பள்ளங்களை கடந்து நதியென பரவுகிறேன் எனது பிரியங்கள் நித்தியமானவை ஒரு பெயர் அற்ற சாலை மலரென என்றேனும் ஒரு சிறுவன் கொய்து உச்சி முகரலாம் இதழ் இதழாய் முத்தமிடலாம் புறக்கணிப்பின் வலிகளை கடந்து பிஞ்சு விரல்களில் கமழும் மணமும் ஒட்டிய நிறமும் வாழ்ந்த வாழ்வின் உன்னத தருணங்கள்
No comments:
Post a Comment