வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

வாழ விரும்புகிறேன் விலங்கை போல

வாழ
விரும்புகிறேன்
விலங்கை போல
வனத்தின்
வனப்புகளின்
ஊடே
தூய காற்று
என் கேசம் கோத
கன்னி பூமியில்
கால் பதித்து
விலங்கை போல
வாழ விரும்புகிறேன்
நான்
நானாய் இருப்பதில்
சிரமம் இல்லை
என் உணர்வுகளும்
உள்ளார்ந்த அன்பும்
உங்களுக்கு
விளங்குவதில்லை
மிருகங்கள்
பொய் உறைப்பதில்லை
வயிறு நிறைந்த பின்னும்
வேட்டை ஆடுவதில்லை
அங்கே இயற்க்கை
சமன் படுகிறது
இப்பொழுது
முடிவு செய்யுங்கள்
உங்கள் வாழ்விடத்தை

No comments:

Post a Comment