வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

சொற்களின் குருதிசொற்களின்
கூர் முனைகளில்
வழிகிறது
என் மௌன குருதி
உனது
மௌன கதவுகளை
திறக்க முயற்சித்து
திரும்புகிறது
சொற்கள்
உனது
புறக்கணிப்பின்
முன் எப்பொழும்
நிராயுதபாணியாக
நான்
வீழ்த்தபட்டும்
உனக்கென
சேகரித்துள்ளேன்
ஒளி ஊடுருவும்
மகத்தான
கண்ணீரை2 comments:

 1. மெளன குருதி.... இது நிறமற்ற குருதியோ?

  சேகரிக்கப்படும் மகத்தான கண்ணீர் ஒருநாள் சிப்பியில் பிறக்கும் முத்தாய் மாறும் ஜி....

  நிராயுதபாணி... விரைவில் தண்டாயுதபாணியாக மாறுங்கள்... (ஆயுதமாக நாங்கள் என்றும் உங்களோடு ஜி.... )

  உணர்வின் வெளிபாடு அருமையாக... வாழ்த்துகள் ஜி..

  ReplyDelete
 2. மிகவும் அனுபவப்பூர்வமான அழகான வரிகள்...நண்பரே

  ReplyDelete