வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

சூழல் -தமிழச்சி தங்கபாண்டியன்













மழைச் சனியன் வந்தாலே
பிழைப்பு மந்தம்தான்
தெருவோரச்
செருப்பு தைப்பவரின்
உரத்த சாபத்தை வாங்கித்
தேம்பிச் செல்லும் மழையை
வழி மறித்து
முத்தமிட நின்ற என்மேல்
முந்திக்கொண்டு
முழுமூச்சாய்
நீரடித்துச் சென்ற
காரோட்டியைச்
சாபமிட்டுச்
சேறாகிப் போனது மனது





3 comments:

  1. ரசனைக்குரிய கவிதை தான்.

    ReplyDelete
  2. கவிதையை பின்னால் ஒலிக்கும் இசையும் அற்புதம்.

    ReplyDelete
  3. நன்றி சத்ரியன் நன்றி ஜோதி ஜி சார்

    ReplyDelete