வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

குழந்தைகள் என்றால் -கவிஞர் தேவதேவன்


















குழந்தைகளென்றால் கடவுளுக்கு ரொம்பப் பிடிக்குமாம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன
?
கடவுள் எப்போதும் குழந்தைகளோடு இருக்கிறாராம்

குழந்தைக்கு அதைப் பற்றி என்ன
?
அண்டத்திலேயே பெரிய சிம்மாசனம் கடவுளுடையதுதானாம்

குழந்தைக்கு அதைப் பற்றி என்ன
?
கடவுள் அதிலேவந்து குந்தியிருகாதப்போ

குழந்தைகள் அதிலே ஏறி உட்கார்ந்து நடிக்குமாம்

கடவுளுக்கு அதைப் பற்றி என்ன
?
சமயங்களில் குழந்தைகள் அதிலே சிறுநீரும் பெய்துவிடுமாம்

கடவுளுக்கு அதைப் பற்றி என்ன
?

நன்றி - கவிஞர் தேவதேவன் 

2 comments:

  1. அதானே! இரண்டும் ஒன்றாய் இருக்கையில்!

    பகிர்தலுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நன்றி சத்ரியன்

    ReplyDelete