வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

காதல் கவிதை

மௌன
வெளியில் உடைந்து
சிதறுகிறது
துளி கண்ணீர்
மரத்தின் இறுதி
இலையென
உனது
நினைவுகளின்
சுவடுகளில்
நிரம்பி வழிகிறது
கண்ணீரும்
எவருடனும்
பகிரவியலா காதலும்
ஒரு உதிர்
பூ
நதியின் அலைகளில்
நிகழ்த்தும்
நடனமென
காலவெளியில்
என் காதலும்
உனது
வனங்களில்
தொலைந்து
போகிறேன் சாபங்களின்
பள்ளத்தாக்குகளில்
மீண்டு
விலகி
சென்றாலும்
கரை தேடும்
அலையென
தேடிக்கொண்டே
கரைந்து கொண்டிருகிறது
வாழ்வும் காதலும்

2 comments:

  1. மிகவும் அருமை நண்பா...

    இதயத்தின் ஏக்கங்கள் நினைத்து பார்க்க பார்க்க கரை நோக்கி வரும் அலைகள் தான்....

    ReplyDelete
  2. நன்றி ஜி மிக்க நன்றி

    ReplyDelete