
மீனை
அரியும்போது
கிடைத்தது
குழந்தையின்
கண்
★★★
பச்சிளங்குழந்தையை
நெடுக
உளியால்
கொத்தியிருக்கிறார்களே
புத்தர் சிலைக்கு
முயற்சி செய்திருப்பார்களா ?
★★★
சாலைபோடும்
பெரு வண்டியைப்
பார்த்ததும்
பதறிப்போய்
பதுங்குகின்றன
விளையாடிக்
கொண்டிருந்த
குழந்தைகள்!
******
மருந்து பற்றி
படித்துக்
கொண் டிருக்கையில்
விழுந்தது மரணம்
********
ஆழிப் பேரலைகளும்
எங்கள் பெண்களை
வீடு புகுந்து
இழுத்துப்போய்
கொல்லத்தான் செய்தன
ஆனாலும்….
--அறிவு மதி
வரிகள் அனைத்தும் அருமை பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி யுஜின் இவை அறிவு மதி கவிதைகள்
ReplyDelete