வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

உனக்கென விட்டு செல்கிறேன் பிரியங்களையும் கண்ணீரையும்

எல்லாம்
முடிந்துவிட்டது
பாதங்களின் கீழ்
நழுவிக்
கொண்டிருக்கிறது
பிரபஞ்சம்
சொல்வதற்கும்
ஏதுமில்லை
செல்ல வேண்டியதுதான்
இருந்தும்
ஏதோ ஒன்று
உனக்கான
ஒன்று
நெஞ்சில் இறங்குகிறது
பெரும் பாரமாய்
யாதென்று அறிவதில்லை
இருப்பினும்
உனக்கென விட்டு
செல்கிறேன்
பிரியங்களையும்
கண்ணீரையும்

4 comments:

 1. அளவு கடந்த நேசமும், அன்பினால் உருகி தவிக்கும் மனமும் விட்டுப்பிரிய மனமில்லாமல் தன் நினைவுகளாய் விட்டுச்செல்வது உயிராய் நேசித்தவையும் உயர்வாய் மதிப்பிடும் தன் நேசத்துரியவருக்காக சிந்தும் முத்துக்களான இந்த கவிதை வரிகளையும் காதல் கசிந்து வழியும் கண்ணீரையும் என்பதை மிக அழகாய் படைத்திருக்கும் கவிதையில் தெரியும் மெல்லிய சோகம் மிக அருமை மணி......

  அன்பு பாராட்டுக்கள்....

  ReplyDelete
 2. தேங்க்ஸ் அக்கா மிக்க நன்றி இது ஒரு விருது எனக்கு

  ReplyDelete
 3. ம்.. பிரிதல் ஒருவருக்காவது வலியை தருகிறது.

  ReplyDelete
 4. வலியே நாம் உயிர் வாழ்கிறோம் என்பதன் அடையாளம்

  ReplyDelete