வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

தோளில் விழும் மழை

ஜன்னலின்
துவாரங்களினுடே
வழிந்து
கொண்டிருக்கிறது
சூரிய வெளிச்சம்

இந்த
அறையில்
நானும் இருளும்
மட்டுமல்ல
தனிமையும்
துயரும்
கூட

இந்த
அறையினின்றும்
உனது
நினைவினின்றும்
வெளியேற வேண்டும்

வானமோ
அடுத்த
மழைக்கு
ஏற்பாடுகளை
செய்து கொண்டிருக்கிறது
எல்லா
வெளியும்
உனது நீட்சியென
விரிகிறது
போக்கிடம்
இன்றி
தவிக்கையில்
தோளை தட்டி
பெய்கிறது
மழை
இன்னும் வாழ்க்கை
இருக்கிறெதென

2 comments:

  1. //இந்த
    அறையில்
    நானும் இருளும்
    மட்டுமல்ல
    தனிமையும்
    துயரும்
    கூட //

    நாங்களும் இருக்கோம் நல்லா பாருங்க...

    //இந்த
    அறையினின்றும்
    உனது
    நினைவினின்றும்
    வெளியேற வேண்டும்//

    சரி வாங்க வெளியேறி போவோம்....

    //வானமோ
    அடுத்த
    மழைக்கு
    ஏற்பாடுகளை
    செய்து கொண்டிருக்கிறது ///

    அதிலும் நனைவோம்.... மகிழ்வாய் இருப்போம்....

    நாங்கள் தோள் கொடுக்கும் தோழனாக்கும்....

    வாழ்த்துகள் ஜி...

    ReplyDelete
  2. youre my shadow i never loss like your friendship

    ReplyDelete