வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

என்னை நான்


எல்லோரையும்
கடந்து
போகிறேன்
சமயங்களில்
என்னையும்
செல்கின்ற
இடங்களில்
விட்டு விட்டு
திரும்புகிறேன்
என்னை
மீண்டும்
தேடி
கிடைப்பதற்குள்
தொலைத்து
விடுகிறேன்
போகும் இடங்களில்
மீண்டும்
என்னை
தொலைப்பதற்கும்
தேடுவதற்குமே
சரியாய்
இருக்கிறது
வாழ்க்கை
பின் எங்கே
வாழ்வது


3 comments:

  1. விழுவது எழுவதற்கே நண்பா...
    விழுந்தவன் எழுந்தே ஆக வேண்டும்..
    சோகம் தரும் வலியில் என்னையும் தொலைத்தேன்.. தேடிக்கொண்டிருக்கிறேன்..அருமை கவிதை...

    ReplyDelete
  2. உங்களை ஏதாவது ஒன்றில் தொலைத்துக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை..

    ReplyDelete