வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

வாழ்த்துக்கள்

17 -09 -2010 அன்று பிறந்த நாள் காணும் நண்பர் தஞ்சை ஸ்ரீனிவாசனுக்கும் திருமதி ஆதிரா@பானுமதி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் பானுமதி அவர்கள் 6000 ௦௦௦பதிவுகல் கடந்து மிக சிறப்பாக ஈகரை வழி நடுத்துவதர்க்காக மட்டுமின்றி எனக்கு பிடித்த சில நல்ல மனிதர்களில் இவர்கள் இருவரும் உண்டு அதற்க்கு இந்த தருணம் சரியாய் இருந்தது இதை ஈகரையில் வாழ்த்த வேண்டும் ஆனாலும் எனது இந்த வலைப்பூவிலேயே வாழ்த்தலாம் என இந்த பதிவை இடுகிறேன் இவர்கள் இருவரையும் வாழ்த்தும் அளவு நான் பெரியவனில்லை ஆனாலும் இருவருக்கும் ஒரு கவிதை இட வேண்டும் என ஒரு ஆசை ஆனால் ஓகோவென்று முகஸ்துதி செய்வது போல் இருந்து இதற்க்கு இந்த பயல் சும்மாவே இருந்திருக்கலாம் என தோன்றிவிடகூடாதே என்ற அச்சமும் இருக்கிறது ஆனால் கவிதை இட வேண்டும் என்ற ஆசையும் விடவில்லை இறை அருளால் சென்ற வருட ஒரு இலக்கிய இதழை புரட்டி கொண்டிருந்த போது எனக்கு மிக பிடித்த தேவதேவன் கவிதை ஒன்றை வசிக்க நேர்ந்தது அதையே இவர்களுக்கு வாழ்த்து இடுகிறேன்

கேண்மை
வின் தழுவி அளாவும்
இந்த மஞ்சுகளை நெருங்கித்
தீண்டுமின்பம் காண்பதற்கோ
நெடிதோங்கின இந்த மலைகள் ?

தீண்டி சிலிர்த்து
செழித்து உருகி
தீராது அருவி நிற்கின்றன

மஞ்சு தவழும்
இந்த மலைகளின் சகவாசத்தாலோ
நெடிதோங்கி வளர்ந்து நிற்கின்றன
இந்த மரங்களும்

மலைகளும் பெரிதுஉவக்கும்
இந்த மரங்களின் சகவாசத்தால்தனோ
வற்றாத
நீரும் ஆங்கு தவழும் காற்றும்
நிழலும் பூவும் கனிகளும் தேனும்
பல்லுயிர்களின் கூட்டுறவு வாழ்வும் போல்
இனிக்கின்றனர் சில மனிதர்கள்

இந்த இனிக்கும் மனிதர்களுக்கு எனது வாழ்த்துகள்

2 comments:

 1. அன்புள்ள மணி,

  பள்ளி பயிலும் காலத்தில் பிடித்த தலைவர் என்று பிடிக்காமல் கூட மதிபெண்களுக்காக எழுதியது உண்டு என் வாழ்வில்...

  ஆனால் இன்று உங்கள் பதிவில் உங்களுக்கு பிடித்த எத்தனையோ நல் உள்ளங்களுக்கு மத்தியில் நானும் ஒருவனாய் இருப்பதும்... அதனை நீங்கள் அன்போடு வெளிக்காட்டியிருப்பதும் என்னுள் எனக்கு இறுமாப்பை அளிக்கின்றது என்பது உண்மை.

  வாழ்த்துவதற்கு வயது நமக்குள் இல்லாவிடினும்... அன்பை அதிகமாக பகிர்ந்திடும் பண்பில் உயர்ந்தவராக இருப்போம் எல்லாருடனும்...

  தங்களின் இந்த வார்த்தை அருவியில் நனையும் எங்களுக்கு... மேலும், பொழியும் மழையாய் கவிதையும் படைத்து உங்கள் அன்பினால் மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்....

  தற்சமயம் ”நன்றி” என்ற ஒற்றைச்சொல்லை என் உயிரோடு இணையாக்கி என் சிரம் தாழ்த்தி அதனை தெரிவிக்கின்றேன் இங்கே...

  ReplyDelete
 2. i dont have anything to give present both of you i have my heart and some smile to you

  ReplyDelete