வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

வார்த்தைகள் மட்டுமேஅனிச்சையான
ஒரு கணத்தில்
நிகழ்ந்து
விட்டது இப்பிரிவு
வார்த்தைகள்
உடைந்து
பிளவு பட்டு
நிற்கிறோம்
யவனம்
மிகுந்த என்
பிரியங்களை
சொற்களின்
பாத்திரத்தில் நிரப்பி
உனக்கென
உனது கரங்களில்
ஏந்திகொள்வாய் என
எண்ணினேன்
நீயோ
என்னையும்
சேர்த்தே நொறுக்கி
வீசி சிரிக்கிறாய்
ஆயிரம்
துகள்களாய் வீழ்ந்தும்
அத்தனை
சிதரல்களிலும்
உன் மீதான
காதல் பரவி
மேலும் காதலிக்கிறேன்
என்றேனும்
என்னை
நினைவு கூர்கையில்
எனது வார்த்தைகள்
என்னை நினைவு
கூறும்
அப்போது
வார்த்தைகளை
ஏந்தி அழாதே
அவை எப்போதும்
வார்த்தைகள்
மட்டுமே

2 comments:

  1. உங்கள் மனத்தின் நிலையை ஆழமாக வடித்துள்ளீர்கள்... அருமை... வாழ்த்துகள்...

    உங்களையும் நான் அறிவேன்.... இக்கவிதையின் கருவினையும் அறிவேன்...

    எல்லாம் நம் வாழ்வின் வெற்றிக்கே...

    ReplyDelete
  2. நன்றி ஜி நன்றி நிச்சயம் வெற்றி நம் பக்கம்தான்

    ReplyDelete