அன்புள்ள கடவுளுக்கு, மனிதர்களைச் சாக விட்டுவிட்டு, புதுசா செய்யறதுக்குப் பதிலா இப்ப இருக்கவங்களையே வச்சுக்கிட்டா என்ன?
ஜேன்
அன்புள்ள கடவுளுக்கு, நான் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அவங்க சர்ச்சிலயே முத்தமிட்டுக்கொண்டார்கள். அது சரியா?
நீல்
அன்புள்ள கடவுளுக்கு, நான் நெனக்கிறேன், ஸ்டேப்ளர் கருவி உங்க கண்டுபிடிப்புகள்ளயே ரொம்பப் பெரிய விஷயங்கள்ல ஒன்னு.
ரூத் எம்.
அன்புள்ள கடவுளுக்கு, பைபிள் காலத்துல நெஜமாவே அப்படிதான் வினோதமாப் பேசிக்கிட்டாங்களா?
அன்புள்ள கடவுளுக்கு, நான் சிலசமயம் பிரார்த்தனை செய்யாதப்பக் கூட உங்களப் பத்தி நெனக்கிறேன்.
அன்புள்ள கடவுளுக்கு, நான் ஒரு அமெரிக்கன். ஆமா, நீங்க என்ன?
அன்புள்ள கடவுளுக்கு, தம்பிப் பாப்பாவக் கொடுத்ததுக்கு நன்றி. ஆனா நான் கேட்டது நாய்க்குட்டிதான்.
ஜாய்ஸ்அன்புள்ள கடவுளுக்கு, உலகத்துல இருக்க எல்லாரையும் நேசிக்கிறது உங்களுக்கு நிச்சயம் ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கனும் சரியா? எங்க வீட்ல நாலே பேர்தான் இருக்கோம், என்னாலயே அது முடியல.
நேன்அன்புள்ள கடவுளுக்கு, கொஞ்சம் கிறிஸ்மஸ்கும், ஈஸ்டருக்கும் நடுவில இன்னொரு விடுமுறை தாங்களேன். இப்ப அந்தச் சமயத்துல உருப்படியா ஒன்னும் இல்ல.
கின்னிஅன்புள்ள கடவுளுக்கு, வர்ர ஞாயித்துக்கிழமை சர்ச்சில என்னப் பார்த்திங்கன்னா என்னோட புது ஷூவைக் காட்டுவேன்.
அன்புள்ள கடவுளுக்கு, நாங்க திரும்பவும் பிறந்து வருவம்னா, என்ன ஜெனிஃபர் ஹார்ட்டனா ஆக்கிடாதே. எனக்கு அவளைப் பிடிக்காது.
அன்புள்ள கடவுளுக்கு, பைபிள்ல வார அந்த ஆள் மாதிரி நானும் 900 வருஷம் வாழனும்.
க்ரிஸ்
அன்புள்ள கடவுளுக்கு, அலாவுதீன் மாதிரி எனக்கும் மந்திர விளக்கைக் குடுத்திங்கன்னா, நான் உங்களுக்கு எது வேணும்னாலும் தருவேன், என்னோட காசையும், செஸ் செட்டையும் தவிர.
ராபேல்அன்புள்ள கடவுளுக்கு, தாமஸ் எடிசன்தான் லைட்டைக் கண்டுபுடிச்சார்னு படிச்சிருக்கோம். பைபிள் வகுப்புல நீங்க லைட்டை (ஒளியை) கண்டுபுடிச்சதா சொன்னாங்க. உங்க கண்டுபிடிப்பத்தான் அவர் திருடியிருக்கணும்.
டோன்னா.அன்புள்ள கடவுளுக்கு, நீங்க மட்டும் டைனசார அழியவிட்டிருக்கலேன்னா எங்களுக்கு வசிக்க நாடே இருந்திருக்காது. நல்ல காரியம் செஞ்சிங்க.
ஜொனாதன்
அன்புள்ள கடவுளுக்கு, இந்த வருஷம் டென்னிஸை என்னோட காம்ப்புக்கு அனுப்பிடாதிங்க.
பீட்டர்.அன்புள்ள கடவுளுக்கு, கெயினுக்கும், ஏபெலுக்கும் தனித்தனி அறை இருந்திருந்தா அவங்க ஒருத்தர ஒருத்தர் கொல்ற அளவுக்குப் போயிருக்க மாட்டாங்க. நானும், தம்பியும் அப்படித்தான் சண்டை போடாம இருக்கோம்.
லேரி
childrens are photo copy of god.so,god wrote his own.
ReplyDelete