வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

த.அகிலன் in கவிதைகள் பிரியம்

கவிதைகள் பிரியம் /01">பிரியம் /01

அவள் அழைத்துப்போனகனவின் பசிய நிலத்தில்வானவில்லின்வர்ணங்களைக்கொண்டபறவையின் பாடல்வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும்.
பாடலின்திசைகளில்நான் கிறங்கிய கணத்தில்சடுதியாய் நீங்கிப்போனாள்கூடவே போயிற்றுஅவளது நிலமும்வானவில் பறவையும்
நான் அலைந்துகொண்டிருக்கிறேன்.அந்த கனவுக்குள்மறுபடியும் நுழையும்திசைகளைத் தேடி.

நிலவு">நிலவு

த.அகிலன் ">த.அகிலன் in கவிதைகள்

இரண்டுசிவப்பு வெளிச்சங்களிற்குமேலாலெழும் நிலவுஅன்றைக்கு மிருந்தது.
ஒருவிதவைத்தாயின்இளைய மகனைஅவர்கள் களவாடிப்போனஇரவில்…
பைத்தியக்காரியைப்போல்தலைவிரி கோலமாய்தெருவில் ஓடியஅவளைச் சகியாமல்மேகங்களினடியில்முகம் புதைத்துக்கொண்டது.
பின்பொரு மழைநாளில்அலைகளின் மேல்ஒருவன் ஏறித்தப்புகையில்…இராமுழுதும் துணையிருந்தது…
யாரும்விசாரணைகளை நிகழ்தும் வரைஎல்லாவற்றினதும்மௌனச் சாட்சியாய்அலைந்து கொண்டேயிருக்கும்அது.

No comments:

Post a Comment