வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

அகதியின் புலம்பல்

வெளியேறி
கொண்டிருந்தபோதும்
என்
மிச்சம்
எதோ
ஒன்றை
இழந்ததை
எண்ணுகிறேன்
இந்த
மண்ணில்
கனவுகள்
கண்டேன்
என்
தலைமுறையின்
பாதச்சுவடுகள்
பதிவதாக
காலற்றவர்களால்
இயலாது நண்பா
என்றொரு
குரல்
தேவனை
கேட்க்கிறேன்
நிர்
படைப்பின்
நாயகன் என்றால்
ஏன்
இதனை
படைத்தீர்
நானும் அவனும்
ஒரு மரத்தின்
வேர்களில்
புறப்பட்ட
கிளை தானே
என்னை
ஏன்
வெட்ட செய்தீர்
உம்
இரத்தம்
வேண்டாம்
பாவங்களை
பங்கு கொள்ள வேண்டாம்
இழந்த
தேசம்
மட்டும்
போதும்
கருகிய பிஞ்சுகள்
மலர்ந்தால்
போதும்
இயலாது
எனில்
உம்
ரத்தத்தை
விட
இங்கே அதிக
கோப்பைகள்
உள்ளன
மறக்காமல்
அருந்தி
பின்
வாயை துடைத்து
விட்டுக்கொள்

No comments:

Post a Comment