வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

கான்பிடன்ஸ் கார்னர்

கான்பிடன்ஸ் கார்னர் – 1

வாழ்வில் பலவித இன்னல்களுக்கு ஆளான இளைஞன் தீர்வுகள் கேட்டு தெய்வத்திடம் முறையிட்டான். விடைகள் கிடைத்தபாடில்லை. தன் குருவிடம் முறையிட்டான். குரு ஏதோ பதில் சொன்னார். காதில் விழவில்லை, நெருங்கி அமர்ந்தான். குரு மீண்டும் ஏதோ சொன்னார். காதில் விழவில்லை, இன்னும்

நெருங்கினான். குரு மறுபடியும் சொன்னார். இம்முறை காதில் விழுந்தது. “கடவுள் சில சமயம் தீர்வுகளை முணுமுணுப்பார். கூர்ந்து கவனி”. பதட்டமின்றி வாழ்வை உற்றுப் பார்த்தான். வெற்றிகள் சேர்த்தான்.

கான்பிடன்ஸ் கார்னர் – 2

“இருப்பதைக் கொடுத்தால் நினைப்பது கிடைக்கும்”. இந்த வாசகத்தைப் பார்த்த இளைஞனின் பையில் இருந்ததென்னவோ முப்பது ரூபாய்தான். சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தவன் கண்களில், உணவின்றித் தவித்த இரு

குழந்தைகளும் ஒரு முதியவரும் பட்டனர். பொட்டலங்களைக் கொடுத்தான். முதியவர் மகிழ்ந்து, தன்னிடமிருந்த பழைய செப்பு நாணயங்களைக் கொடுத்தார். அதே நாளில் பழைய நாணயங்கள் சேகரிக்கும் கோடீஸ்வரர் ஒருவரைக் காண நேர்ந்தது. இந்த நாணயங்கள் நல்ல விலைக்குப் போயின. கொடுப்பவர்களே பெறுகிறார்கள் என்பது புரிந்தது.

கான்பிடன்ஸ் கார்னர் – 3

வீட்டில் வளர்ந்த கோழிக்குஞ்சை விளையாட்டாய் அந்தச் சிறுவன் கொன்றான். அதை பார்த்துவிட்ட அக்கா, அம்மாவிடம் சொல்வதாய் மிரட்டியே அவனை எல்லா வேலையும் வாங்கினாள். ஒருநாள், மனம் பொறுக்காமல், அம்மாவிடம் சொல்லி அழுதான் சிறுவன். அம்மா

அவனை மன்னித்தாள். கோழிக்குஞ்சு கொலை, நாம் செய்யும் தவறுகள். மிரட்டும் அக்கா நம் குற்றவுணர்வு. மன்னிக்கும் அம்மா – கடவுள். கடவுள் நம்மை ஒருமுறை மன்னிப்பதே மறுமுறை தவறு செய்யாமல் இருப்பதற்குத்தான்!!


கான்பிடன்ஸ் கார்னர் – 4

ஒரு மனிதனுக்கு, தன் சக்திகள் தெரியாமல் இருந்தன. ஒரு தொழிலதிபரை சந்தித்துக் கேட்டான். அவர் சொன்னார், “நீ மூங்கிலா, கரும்பா? கண்டுபிடி” என்று. மூங்கிலுக்குள்ளே வெற்றிடம் இருக்கும். அதற்குள் நுழையும் காற்று இசையாகும். கரும்பின் உள்ளே சாறு

இருக்கும். கசக்கி எடுக்க வேண்டும். நீ இசையை வெளிப்படுத்தும் மூங்கிலாய் இரு. கசக்க வேண்டிய கரும்பாய் இருக்காதே” என்றார் அவர்.

கான்பிடன்ஸ் கார்னர் – 5

ஒரு தொழில் முன்னோடியாய் இருப்பது மட்டுமே முதன்மை நிலையில் வைத்துவிடாது. ஹென்றிஃபோர்டு, கார் உலகின் முன்னோடி. கறுப்பு நிறக் கார்களை மட்டுமே விற்று வந்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உருவான வேகத்தில் பல வண்ணக் கார்களை

உற்பத்தி செய்து வென்றது. ஓராண்டு காலம் தன் தொழிற்சாலையை மூடி, புதிய கருவிகள் உருவாக்கி, தானும் பல வண்ணங்களில் கார்களை உற்பத்தி செய்தார் ஃபோர்டு. ஆமை – முயல் போட்டி எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.No comments:

Post a Comment