“உங்கள் எல்லா சிக்கல்களுக்குமான தீர்வு, ஒரு குவளை தயிரில் இருக்கிறது” என்றார் ஒருவர். “எப்படி?” என்று எல்லோரும் கேள்வி எழுப்பினர். “தயிருக்குள் இருக்கும் வெண்ணெய் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. தயிரைக் கடைகிறபோதுதான் அதிருந்து வெண்ணெய் திரள்கிறது. பிரச்சினை என்கிறதயிர்ப் பாத்திரத்தைப் பார்த்து

மிரள்வதால் பயனில்லை. பிரச்சினைகளை புத்தி கொண்டு கடைந்தால் தீர்வு என்கிறவெண்ணெய் திரண்டு வரும்” என்றார் அவர்.