வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

முன் -எம். யுவன் கவிதை

முன்

விளையாட்டுப் பேச்சுக்கு நேரமில்லை
இப்போது
இலைகளை உதிர்க்கத் தொடங்கிவிட்டது
மரம்.
பனிக்கட்டி முழுவதும் நீராக இன்னும்
சில துளிகளே பாக்கி.
வில்லும் தந்தியும் உராயும்

ஒலித்துளி
செவிப்பறையில் மோதிச் சொட்டுகிறது.
சதா பொருத அழைக்கும்
போர்க்கணத்தின் நுழைவாயில்
திறந்துவிட்டது.
பனித்துளியின் சுழலில் சிக்கிச்
சிதறுமுன்
ஓசையின் கம்பி அழிகளுக்குப் பின்னால்
சிறையுறுமுன்
புதுத்துளிர்களைப் பூண்டு
மரம் தன் உடலை
மறைத்துக் கொள்ளுமுன்

No comments:

Post a Comment