வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

அப்பாஸ் கவிதைகள்

நீ தவித்துக்கொண்டே இருக்கிறாய்
இன்னும்
எதையோ சொல்ல
கனவில் வி��யும்
மரங்களின் கிளைப்பரப்பின் பூமியில்
தனிமையை உணர்கிறேன் நான்.

அது
உனக்குத் தருவதற்கு
சிறு புன்னகையும் முத்தமும்
கொண்டிருக்கிறது
வேறு.

கனவுப் படுக்கை
புறவெளியின்
நீண்ட அகன்ற தொடுமுனையில்
நீ கூறியவற்றை
நான் தொலைத்துக்கொண்டே இருக்கிறேன்.
ஒருவேளை
அது
உன் கனவுப் படுக்கையில்
நிலவு ஒளியென இறங்கி முடிகிறதோ
தொ�யாத பொழுது
சிந்தனையற்ற பகலின் அறையினுள்
அவைகளை
நிழல் படமென
நான் மாட்டி வைத்திருக்கிறேன்.
எப்பொழுதாவது
நீ வந்தால்
என் பார்வையில் படுவதற்கு

பின்
மூடிய கதவைத் திறந்து
நட்சத்திரங்கள்
உனக்கு என்னதான் சொல்லிவிடப்போகிறது
பின் உணவருந்தும்
மேஜையில்
படுக்கை அறையில்
நீ கனவு காண்பதுமட்டும்
உனக்கு
என்னதான் செய்துவிடப் போகிறது.
உனது ஒப்பனைகளை நீயே ரசிப்பதும்.
கதவுகளை மூடு.
ஆடைகளைக் களைந்து எறி
ஒப்பனைகளையும்.
நடனமாடத் தொடங்கு
வேறு ஒன்றும்
இப்பொழுது நிச்சயமில்லை.

No comments:

Post a Comment