வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

கடல் அலைகள் - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்

அலைகள் எங்கள் தாயாரும்
அதுவே எங்கள் நண்பனுமாகும்
அலைகள் கோபம் கொண்டு
கரைநோக்கிவிறு கொண்டு எழுவதுண்டு
அதன் பேரழிவில் வாழ்வில்
சோதனைகள் வருவதுண்டு
ஆழ்கடல் அலை அமைதியற்று ஆர்ப்பா?க்கும்போது
பாதிக்கப்பட்ட நெஞ்சங்கள்
அலைகடல் போன்று நிலையின்றி தவிக்கின்றன
இந்நிலை எங்குள்ளோருக்கு வந்தாலும்
அதனை அறிவும், உழைப்பும், துணிவும் கொண்டு
இறைவன் அருளால் வெற்றி பெறுவோம்
நாம் எல்லோரும் இறைவன் அருளால்
வெற்றி பெறுவோம்.

(30-6-2005 அன்று நாகப்பட்டினத்தில் சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிட்டபோது நமது குடியரசு தலைவர் அப்துல் கலாம் வாசித்த கவிதை!)

No comments:

Post a Comment