வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி எழுத்து : நீலமணி

இது என் பேப்பர்

ரெயிலில் செல்கையில்

அடுத்தவர் தோள்மேல்

அரை மேய்ந்ததில்லை

விரைந்து விழுங்கும்

இரவல் ஷீட் அல்ல

கைக்குள் வைத்து

மடித்துப் படிப்பேன்

மேஜைமேல் போட்டு

விரித்துப் பார்ப்பேன்

பகலிலும் படிப்பேன்

இரவிலும் படிப்பேன்

படிக்காமல் கூட

தூக்கிஎறிவேன்

இது என் பேப்பர்



(புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதியை இலக்கியச் சங்க வெளியீடு டிசம்பர் 1972 ஆம் ஆண்டு. அப்போது அதன் விலை 30 பைசா. அதில் வெளியான கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் -அழகியசிங்கர்)

thank you navina virutcham

No comments:

Post a Comment