வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

கமலஹாசன் கவிதை

காடுவாழ் மந்திக்கும் எனது மரபணுவிற்கும்
கதிரளவாம் வித்தியாசம் மூன்று விழுக்காடுதானாம்

மரமேறும் குரங்கின்று வேறுபட்டுருமாறி
மறம்பேணும் குரங்கன்றி வேறென்னவாயிற்று?

மயிரோடுகூடவே நுண் உணர்வை உதிர்த்துவிட்டு
தலைசீவத் தொ�கின்ற குரங்கானோம் வேறென்ன?

மரத்திலே தூங்கையில் வீழ்கின்ற பயம் இன்னும்
பழங்கனவாய் வருகிறது மரபணுவில் பதிவுற்று

மார்தட்டும் மந்திகளின் இயல்பான செய்கையைத்தான்
நான் என்ற சொல்லாலே இயம்புகிறோம் பணிவாக

பேசக்கற்றதினால் நுட்பம் செய்வித்தோம்
பேசக்கற்றதினால் பின்தங்கி நிற்கின்றோம்.

மொழியெனும் அருங்கலம் உணர்வெனும் வழிதவறி
தரைதட்டி நிற்கிறது சிந்தனைக் கடற்கரையில்
கரையோரக் காடுகளில் மொழியற்ற மந்திகளின்
ஞான கோஷங்கள் மெலிதாகக் கேட்கிறது.

காடுவாழ் மந்திக்கும் எனது மரபணுவிற்கும்
கதிரளவாம் வித்தியாசம் மூன்று விழுக்காடுதானாம்

1 comment: