‘‘நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
ஒரு வண்ணானின் நாக்கு
அழுக்காக்கியது’’
- அப்துல் ரகுமான் (பால்வீதி)
‘‘பூங்கொடியே உனக்குப்
பூ வாங்கி வருகிறேன்
முதன்முதலில் தானம் தர ஆசைப்பட்டவன்
கர்ணன் வீட்டுக் கதவைத்
தட்டியது மாதிரி’’
- மீரா (‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ தொகுப்பில் விடுபட்ட கவிதை ஒன்று)
வானவில்
‘‘இந்தப் பொல்லாத வானம்
மழையையும் தூறிக் கொண்டு
துணியையும் உலர்த்துகிறது’’
- நா.காமராசன் (கறுப்பு மலர்கள்)
‘‘ஐந்து புலன்களும்
கால் பந்து விளையாடும்
மைதானம் உடல்
விதிகள் தெரிந்தால்
விளையாட்டு
ஆழம் தெரியாமல் ஆடினால்
பேய் மணல்’’
- சிற்பி (இறகு)
‘‘அம்பு கூர்மையாய்
இருந்தென்ன
பார்வை?’’
- ஈரோடு தமிழன்பன் (ஒரு வண்டி சென்ரியு)
காதல்
‘‘இரண்டு கண்களும்
இரண்டு கண்களும்
எதிர்ப்பட்டுக்கொள்ள
நான்கும் குருடானபின்
நடக்கும் நாடகம்’’
- மு.மேத்தா (அவர்கள் வருகிறார்கள்)
______________________________________
நன்றி
கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள்-குமுதம் 12-12-07
No comments:
Post a Comment