வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

தூர் -பூமா ஈஸ்வரமூர்த்தி

வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர்வாரும் உற்சவம்
வருடத்திற்கொரு முறை
விசேஷமாய் நடக்கும்.
ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்.
கொட்டாங்குச்சி, கோலி,
கரண்டி,
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே
சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனசு வரும்?
பகைவென்ற வீரனாய்
தலைநீர் சொட்ட சொட்ட
அப்பா மேலே வருவார்
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னியிருந்து தான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசி வரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

1 comment:

  1. இது நா.முத்துகுமார் எழுதியது

    ReplyDelete